உலக செய்திகள் செய்திகள் அமெரிக்கா…குடிநீருக்கு தனி கட்டணமா…!!! Sathya Deva16 August 2024089 views பெங்களூருவை சேர்ந்தவர் இஷான் சர்மா. யூடியூப் பிரபலமான இவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியிருந்தார். அப்போது ஊழியர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டநிலையில் குடிநீருக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து வீடியோவுடன் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் ஒருநாள் கட்டணம் ரூ,16 ஆயிரம் என்றும் ஆனால் குடிநீர் காசு கொடுத்து தனியாகதான் வாங்க வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இஷான் சர்மாவின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிய நிலையில் ஓட்டல் நிர்வாகத்தினர் மீது கடும் கண்டனம் எழுந்தது.