உலக செய்திகள் செய்திகள் அமெரிக்கா விமான நிலையத்தில் தீ விபத்து…9 பேர் காயம்…!!! Sathya Deva25 July 20240126 views அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விமான நிலையத்தின் டெர்மினல் எட்டில் உள்ள எஸ்கலெட்டரில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அலறி எடுத்து ஓடினர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இதில் 9 பேர் காயம் அடைந்ததாகவும் 900-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது .இந்த சம்பவத்தால் மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.