அரசு தொலைத்தொடர்பு சேவை…பி.எஸ்.என்.எல் 5ஜி விரைவில்…!!!

அரசின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் விரைவில் 5ஜி மற்றும் விரிவு படுத்தப்பட்ட 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது 5ஜி திட்டம் சோதனை கட்டத்தில் உள்ள நிலையில் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா பி.எஸ்.என்.எல் 5ஜி -யை பயன்படுத்தி வீடியோ கால் சேவையை முதல்முறையாக பரிசோதித்துப் பார்த்தார். டெல்லியில் உள்ள சி- டாட் கேம்பஸில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

இதனை அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அதில் பகிரப்பட்ட அமைச்சரின் வீடியோ கால் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சேவைக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை அதிகரித்து வரும் நிலையில் அனைவரின் பார்வையும் பி.எஸ்.என்.எல் பக்கம் திரும்பி உள்ளது என குறிப்பிடப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!