இந்திய வனவியல் ஆராய்ச்சி கல்வி பயிற்சி மற்றும் சூழலியல் மறு சீரமைப்பு மையத்தின் மாணவர் ராகுல் நிஷாந்த் ஆவார் . இவர் உத்திரபிரதேசத்தில் ஈர நிலங்களில் புதிய வகை நாகப்பாம்பு இனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அந்த பாம்பிற்கு “அல்பினோ ஸ்பெக்டாக்கிள்ட் ” பெயரிடப்பட்டது. இந்த பாம்பு வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற உடலாலும் சிவப்பு நிற கண்களையும் கொண்ட அரிய வகை தோற்றமாக காணப்படுகிறது .
அவரது கண்டுபிடிப்புகள் சர்வதேச இதழான “ரெப்டைல்ஸ் அண்ட் அம்பிபியன்ஸ் “என்ற இதழில் இடம்பெற்றுள்ளது. இவர் வனவியல் துறையில் பட்டம் பெற்றவர் ஆவர் . இவர் கூறுகையில் பல்லுயிர் பற்றிய புரிதலை விரிவு படுத்தியது மட்டுமல்லாமல் நில ஈரங்களின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது என்று கூறியுள்ளார் . இந்த கண்டுபிடிப்பு வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது .