உலக செய்திகள் செய்திகள் அரிய வகை நோய்… சூரிய ஒளி என்றால் அலர்ஜியா…? Sathya Deva21 July 20240104 views மனித உடலில் சில மணி நேரமாவது சூரிய ஒளிப்பட வேண்டும். அப்பொழுதுதான் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும் என்று கூறுவார்கள். ஆனால் ஸ்பெயினில் வசிக்கும் டால் டாமிங்கஸ் என்ற சிறுவன் அவருக்கு சூரிய ஒளி என்றாலே அலர்ஜி என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தன் உடல் மேல் சூரிய ஒளி படாத வகையில் முக கவசம் மற்றும் ஆடைகளை அணிந்து வெளியில் சென்று வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இது மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே வரும் ஜெரோடெர்மா பிக்மெண்டோசம் என்ற அரியவகை நோயினால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பால் டாமிங்க் கூறுகையில் நான் பகலின் வெளியே செல்வேன் அதற்கு பாதுகாப்பு ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் நீண்ட சட்டை, தொப்பிகள், கண் கண்ணாடி மற்றும் முக கவசம் ஆகியவற்றை கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்தார். அந்த சிறுவனை அப்பகுதி மக்கள் ஆச்சிரியத்தில் பார்த்து வருகின்றன.