தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைதொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார்.
தற்போது. இவர் ”வாழை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இது குறித்து நடிகர் விஜய் சேதுபதி, ”வாழை அற்புதமான திரைப்படம். படம் முடிந்தது போலவே தெரியவில்லை. இன்னும் அதற்குள்ளேயே இருக்கிறேன். இந்த மாதிரி ஒரு படத்தை எடுத்ததற்கு இயக்குனர் அவர்களுக்கு நன்றி. இந்த அற்புதமான படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள்” என கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.