அவமானப்படுத்திய அமெரிக்கா….. தோள் கொடுத்த இந்தியா…. ஓபன் ஹெய்மர்-க்கு பிரதமர் கொடுத்த ஆஃபர்..!!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்  இயக்கத்தில் வெளியான ஓபன் ஹெய்மர்  திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே பதிமூன்று கோடிக்கும் மேல் வசூல் சாத செய்து இந்தியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் நாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள Cillian Murphy  ஓபன் ஹெய்மராகவே வாழ்ந்துள்ளார். படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல், விமர்சன ரீதியாகவும் இந்தியர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஓபன் ஹெய்மர்  குறித்து இந்தியர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தேடத் தொடங்கியுள்ளனர். அதில், ஓபன் ஹெய்மர்-க்கும்  இந்தியாவிற்கும் ஆன தொடர்பு குறித்த சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதம் தன்னுள் ஏற்பட்ட  தாக்கத்தை விவரிக்கும் விதமாக பகவத் கீதையிலிருந்து சில வார்த்தைகளை எடுத்து அவர் பேசும் உருக்கமான விடியோவை இன்றும் நாம் இணையத்தில் காணலாம். 

ஓபன் ஹெய்மர்-க்கு இந்தியாவில் குடியுரிமை பெற்று வாழ்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது நம் எத்தனை பேருக்கு தெரியும்? முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு அணுகுண்டின்  தந்தை என்றழைக்கப்படும் இயற்பியலாளர் ஓபன் ஹெய்மர் அணு ஆயுதங்களுக்கு எதிரான அறிக்கைகளால் அவமானப்படுத்தப்பட்ட பின்னர், 1954 இல் இந்தியக் குடியுரிமையை வழங்கினார். ஆனால் அவர்  ஆழ்ந்த தேச பக்தி கொண்ட  அமெரிக்கர் என்பதால், இதை பெரிதாக அவர் ஏற்றுக் கொள்ளாததாக கூறப்படுகிறது. 

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?