செய்திகள் மாநில செய்திகள் ஆகஸ்ட் மாதம் 3 கோடி மரக்கன்று நட தீர்மானம்…. அசாம் மந்திரி ஹிமந்தா….!! Sathya Deva20 July 20240102 views அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3 கோடி மரக்கன்றுகளை நட தீர்மானித்ததாக கூறி உள்ளார். மேலும் 3 முதல் 4 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயம் செய்தால் வனப்பகுதியை 2 சதவீதம் அதிகரிக்க உதவும் எனவும் இதனால் அடுத்த 5 மற்றும் 6 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் நமக்கு சாதகமாக அமையும் என கூறியுள்ளார். இவர் கடந்த ஆண்டில் ஒரே நாளில் 1 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருந்தபோது அதில் 1.12 கோடி மரக்கன்றுகளின் நட்டு வைத்து அதில் 90 சதவீதம் உயிர் பிழைத்துள்ளது எனவும் அவர்களிடம் கூறினார். இந்த மரங்களை நடும் பிரச்சாரம் தொடர்பாக அதனை மாநில அரசு ஏற்கனவே ராணுவம், விமானப்படை, பள்ளிகள், கல்லூரிகள் ,சுய உதவி குழு மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என பல்வேறு நிறுவனங்களை இணைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் காடுகள் அழிக்கப்படுவதால் அதனை மீட்டெடுக்கும் விதமாக இந்த இயக்கங்கள் உருவாகும் எனவும் கூறியுள்ளார்.