பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தப்படியாக தெலுங்கு தேசம் 16 இடங்களையும் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் வென்று முக்கிய வாய்ந்த கட்சியாக உள்ளன. இந்நிலையில் 2024 -25 மத்திய பட்ஜெட்யில் நிர்மலா சீதாராமன் தங்கள் பல்வேறு திட்டங்களை பற்றி கூறினார்.
அதில் மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு ரூபாய் 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பீகாரின் புதிய சாலைகள் அமைப்பது உள்ளீட்ட திட்டங்களுக்கு 26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் அறிவித்தார். இவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவளித்துள்ள ஆந்திரா, பிகாருக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டதாக எதிர் கட்சிகள் அமளிலில் ஈடுப்பட்டனர். இதனால் பாராளுமன்ற சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது.