ஆந்திராவில் மழை பாதிப்பு…சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் வைரல் பதிவு…!!!

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. இது குறித்து தெலுங்கு திரையுலக மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:- தெலுங்கு மாநிலங்களில் பெய்து வரும் மழையின் பாதிப்பு அதிக அளவு உள்ளது. பல கிராமங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.உங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய ஒரே வேண்டுகோள் அவசரமில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

வைரஸ் காய்ச்சல் அபாயம் இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற பேரிடர்கள் ஏற்படும் போது எங்கள்ரசிகர்கள் எப்போதும் மக்கள் மற்றும் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் தற்போதும் மக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!