செய்திகள் மாநில செய்திகள் ஆந்திராவில் வெள்ளம்…JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு…!!! Sathya Deva2 September 2024077 views வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறி வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகுகளில் சென்று சந்திரபாபு நாயுடுபார்வையிட்டார். இந்நிலையில், இன்று ஆந்திராவில் வெள்ளத்தால் விஜயவாடா பாதிக்கப்பட்ட பகுதிகளை JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரெயில்களை தெற்கு ரெயில்வே இன்று ரத்து செய்துள்ளது.