செய்திகள் மாநில செய்திகள் ஆந்திரா மாநிலம்…சிலிண்டர் வெடித்து 3பேர் பலி…!!! Sathya Deva17 August 2024074 views ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமையலறையில் இருக்க வேண்டிய சிலிண்டர்,படுக்கையறைக்கு வந்தது எப்படி என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். உயிரிழந்த ரமாதேவியின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், ரமாதேவி வேறொருவடன் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரமாதேவியின் கள்ளக்காதலனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது