செய்திகள் மாநில செய்திகள் ஆந்திர மாநிலம்…அணு உலை வெடித்ததால் பரபரப்பு…!!! Sathya Deva21 August 20240114 views ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) உள்ள Escientia என்கிற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதிய உணவு நேரத்தின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அணு உலை வெடித்ததால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது.வெடி விபத்து குறித்து தகவல் தெரியவந்ததை தொடர்ந்த, போலீசார் மற்றும் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, ஆம்புலன்ஸ்கள் வளாகத்திற்கு நுழைந்தது தெரிந்தது. இந்த விபத்தில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்தவர்கள் அனகாபள்ளி என்டிஆர் மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட அவசர சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன. அணு உலை வெடித்ததையடுத்து கட்டிடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.