Home செய்திகள் ஆந்திர மாநிலம்…பசு மாட்டின் வயிற்றில் 70கிலோ பிளாஸ்டிக்…!!!

ஆந்திர மாநிலம்…பசு மாட்டின் வயிற்றில் 70கிலோ பிளாஸ்டிக்…!!!

by Sathya Deva
0 comment

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பசு மாடு ஒன்று வயிறு பெருத்தபடி அவதிப்பட்டு சாலையோரம் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை வக்கீல் திம்மப்பா என்பவர் பார்த்து அந்த பசு மாட்டிற்கு உதவி செய்ய கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். உடனே கால்நடை மருத்துவர்கள் மாட்டை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறகு மாட்டிற்கு பரிசோதனை செய்ததில் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் மாட்டின் வயிற்றிலிருந்து 70 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது பசுமாடு ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.