செய்திகள் மாநில செய்திகள் ஆந்திர மாநிலம்…விடுதி மாணவர்கள் 3 பேர் பலி…!!! Sathya Deva20 August 2024069 views ஆந்திர மாநிலம், அனகா பள்ளி மாவட்டம், அரட்ல கோட்டோவை சேர்ந்தவர் கிரண் குமார். கிறிஸ்தவ பாதிரியாரான இவர் கோடபு ரத்லா என்ற இடத்தில் கொட்டகை அமைத்து கிறிஸ்தவ ஆலயம் நடத்தி வருகிறார். அவர் ஏழை மாணவர்கள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி ஒன்று அமைத்திருந்தார். அதில் 97 மாணவ, மாணவிகள் உள்ளனர். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு ஒருவர் தனது வீட்டு நிகழ்ச்சியில் மீதமான சிக்கன் பிரியாணி மற்றும் சமோசாக்களை விடுதியில் தங்கி உள்ள மாணவ மாணவிகளுக்கு கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டு ஜோஸ்வா என்ற மாணவனுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அந்த மாணவனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் ஆனால் அந்த சிறுவன் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். விடுதியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிரண்குமார் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். பெற்றோர்கள் விடுதிக்கு வந்து மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் இரண்டு மாணவிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரண் குமாரை கைது செய்தனர். இதன் பிறகு மந்திரி வாங்கலடி அனிதா நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆந்திராவில் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் அனாதை இல்லங்கள், ஆதரவற்ற இல்லங்கள் போன்றவை மூடப்படும் என குறிப்பிட்டு இருந்தார்.