ஆபத்து.! சாலையை சீரமைக்க வேண்டும்.. மக்கள் கோரிக்கை.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் வரை செல்லும் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இதன் அருகில் உள்ள சில பகுதிகளில் சர்வீஸ் சாலையும் இருக்கின்றது. இதில் சர்வீஸ் சாலையை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். சென்ற மழைக் காலங்களில் பரணி புத்தூர், கொளுத்துவான்சேரி, ஐயப்பன் தாங்கல் மவுலிவாக்கம் ஆகிய பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்காக தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலையை உடைக்காமல் அதற்கு இடையிலேயே இரண்டு இடங்களில் சிறு கால்வாய்கள் அமைக்கப்பட்டது.

இந்த பணிக்காக சாலை முழுவதும் தோண்டப்பட்ட நிலையில் மக்களின் பயன்பாட்டிற்கு இந்த சாலைகள் இல்லாமல் இருந்தது. தற்போது அந்த பணிகள் முடிந்த நிலையில் சிறு கால்வாய் மீது தற்காலிகமாக மண்ணைக் கொட்டி மூடி வைத்துள்ளார்கள். இருப்பினும் ஆபத்தாக உள்ள அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் உணராமல் சென்று வருகின்றார்கள். மழை காலங்களில் மண் உள்ளே இறங்கினால் விபத்து நேரலாம். ஆகையால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் செல்வதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Related posts

மாணவிக்கு பாலியல் தொல்லை… வெளியான திடுக்கிடும் உண்மை… நாகர்கோவிலில் பரபரப்பு…!!

அதிமுக கிளை செயலாளர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை… சேலம் அருகே பரபரப்பு…!!

செப்.5… வ.உ.சி.யின் 153-வது பிறந்தநாள்… அதிமுக சார்பில் மரியாதை…!!