செய்திகள் மாநில செய்திகள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!! Sathya Deva6 October 20240117 views சென்னை எழும்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். பேரணியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதேபோல், கோவையில் பலத்த பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடைபெற்றது. கோவை சவானந்தா காலனி முதல் அம்ருதா வித்யாலயா பள்ளி வரை பேரணி நடைபெறுகிறது.நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காக்கி- வெள்ளை சீருடையுடன் பங்கேற்றுள்ளனர். விஜயதசமியையொட்டி ‘பதசஞ்சலனம்’ என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்துகிறது. தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தென்காசியில் சுமார் 3 கிலோ மீட்டர் நடைபெறும் இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.