செய்திகள் மாநில செய்திகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குடும்பம்…இமாச்சல பிரதேச முதல்வர் இரங்கல்…!!! Sathya Deva11 August 2024081 views இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த கனமழையால் வட இந்தியா மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தின் பெய்து வரும் கனமழையால் ஆறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பருவ காலங்களில் மட்டும் தண்ணீர் வரும் நதியான ஜெய்ஜோன் சோவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது திருமண நிகழ்வுக்காக இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரு குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வந்துள்ளனர். அவர்கள் காரில் ஆற்றைக் கடக்கும் போது அடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் என எச்சரித்து போதும் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் சென்று உள்ளனர். இதனால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆற்றில் இருந்து ஐந்து பெண்களின் சடலங்கள் உட்பட 9 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் காணாமல் போன 2 பேரை தேடும் முயற்சியில் மீட்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.