சினிமா செய்திகள் தமிழ் சினிமா ‘ஆளே அடையாளம் தெரியல!’ அமெரிக்காவில் நடிகர் சூரி… வைரலாகும் புகைப்படம்….!!! Sowmiya Balu14 July 2024072 views தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்றுள்ள பரோட்டா காமெடி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சூரி. இவர் தொடக்கத்தில் நிறைய படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்தார். பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் வெற்றியை தொடர்ந்து கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கருடன் படம் வெளியான நிலையில் தற்போது விடுதலை 2 போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன. இவர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளார். அங்கு கூலிங் கிளாஸ் போட்டு கால் மேல் கால் போட்டு படி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.