உலக செய்திகள் செய்திகள் இங்கிலாந்தில் நடன பள்ளி மாணவர்களுக்கு கத்தி குத்து..2பேர் பலி…9 பேர் படுகாயம்… Sathya Deva30 July 2024090 views இங்கிலாந்தில் சவுத் போர்ட் நகரில் நடன பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நடனப்பள்ளியில் ஏராளமான சிறுவர்களும் சிறுமிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்த சிறுவர்களை 17 வயது சிறுவன் திடீரென கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இந்த தாக்குதலின் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலை தடுக்க சென்ற 9 பேருக்கு கத்தி குத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த நடன பள்ளியில் இருந்து சாலையின் வெளியே இரத்த காயத்துடன் ஓடி உள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு தகவல் அறிந்து வந்து போலீசார் தாக்குதல் நடத்திய சிறுவனை கைது செய்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்திய சிறுவன் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது. இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கூறும்போது குழந்தைகள் மீதான தாக்குதல் பற்றி அறிந்ததும் நானும் என் மனைவியும் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தம் என்று கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இங்கிலாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.