இங்கிலாந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் ஏற்றுமதி…உலக அளவில் உடன்பிறப்புகள்….!!!

இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்நாட்டில் உள்ள விதிகளின்படி, ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்துக்கு மேல் கொடுக்கமுடியாது. விந்தணுவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வரம்பு எதுவும் இல்லை. இதைப் பயன்படுத்தி விந்தணு தானம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப் படுகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சிலருக்கு இங்கிலாந்திலும், உலக அளவிலும் உடன்பிறப்புகள் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்து விந்தணு மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்துவந்தது. அதன்பின் நிலைமை முற்றிலும் மாறியது. 2019 மற்றும் 2021-க்கு இடையில் மட்டும் 7,542 ஸ்ட்ரா விந்து இங்கிலாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஒரு கிளையைத் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் நன்கொடையாளர்கள் சராசரியாக 25 குடும்பங்களுக்கு உதவுகிறார்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!