சினிமா செய்திகள் செய்திகள் இதோ வந்தாச்சு….தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!! Gayathri Poomani16 June 2024086 views இந்திய திரை உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கும் சன் பிக்சன் திரைப்படமான ‘கல்கி 2898 கி.பி’ படம் வருகின்ற ஜூன் மாதம் 27-ஆம் தேதி அன்று திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பிரபாஸ், திஷா பவானி மற்றும் உலக நாயகன் கமலஹாசன் என பல முன்னணி நட்சத்திரங்கள் உட்பட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தக் ‘கல்கி 2898 A D’ திரைப்படத்தை இயக்குனர் அஸ்வின் மற்றும் வைஜேந்தி மூவிஸ் தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதை ஒரு பன்மொழி திரைப்படமாக புராணக் கதைகளால் கவரப்பட்டு எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் துணைக்கதை வாயிலாக கூறும் அளவில் இப்படம் உருவாக்கியுள்ளது. இவை திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர் இணைந்து ப்ரோமோஷன் பணிகளை மிக பிரம்மாண்டமாக துவங்கி இருக்கின்றனர். இதனை அடுத்து இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பைரவா பாலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும், இதில் சந்தோஷ் நாராயணன் இசையில் அனைத்து பாடல்கள் வெளியாக இருக்கிறது.