“இந்தியன் 2” ப்ரோமோஷனில் கலந்து கொள்ளாத காஜல் அகர்வால்… இதுதான் காரணமா…?

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் காஜல் அகர்வால் கலந்து கொள்ளவில்லை.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு மட்டும் வந்திருந்தார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற எந்த பிரமோஷன் நிகழ்ச்சிகள், டிவி, யூடியூப் நிகழ்ச்சிகள் போன்ற எவற்றிலும் அவர் பங்குபெறவில்லை. இந்நிலையில், இது குறித்து கேட்ட கேள்விக்கு இயக்குனர் சங்கர், ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வாலின் காட்சிகள் கிடையாது எனவும், இந்தியன் 3 திரைப்படத்தில் தான் அவரது காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

அதில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார் என தெரிவித்திருக்கிறார். ‘இந்தியன் 3’ படம் ரிலீஸ் ஆகும் போது அதன் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!