இந்திய ஊழியர் ஒருவரின்…. நெகிழ்ச்சியாக பதிவு…!!!

இந்தியர்கள் வேலையில் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்தால் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பரவி இருக்கின்றனர். வெளிநாட்டு முதலாளிகள் விரும்பி வேலைக்கு சேர்ப்பது இந்தியாவில் தயாரான பட்டதாரிகளே என்ற அளவுக்கு நிலைமை இருக்கும் சூழலில் அதை எடுத்துக்காட்டு விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஆரோ நிறுவனத்தில் இன்ஜினியராக இந்திய ஊழியர் ஒருவர் வேலை செய்கிறார். அவர் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்துள்ளார். இது அந்த நிறுவனத்தின் சிஏஒ ரோஷன் படேல் அவர்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

அப்போது அந்த ஊழியருக்கு மெசேஜ் செய்த அவர்” நீங்கள் வெகு நாட்களாக விடுப்பு எடுக்காமல் வேலை செய்வதாக நான் அறிந்தேன். எனவே நீங்கள் நிச்சயம் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அந்த ஊழியர் சிஏஓக்கு “எனக்கு விடுப்பு வேண்டாம்” சார் என்று கூறி நமது நிறுவனத்தின் பிராடக்ட் மார்க்கெட் தரத்தினை அடைய எனது உடல் படலமாக செயல்படும் என்று கூறியுள்ளார். இந்த ஊழியரின் கடமை உணர்ச்சியை எண்ணி மனம் நெகிழ்ந்த சிஏஓ அவர்களின் இந்த உரையாடலை இணையதளத்தில் பதிவேட்டு இந்திய இன்ஜினியர்கள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டவர்கள் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!