டெல்லியில் இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் ரயில்வே அமைச்சகத்திற்கான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடந்தது. அதில் அனில் பலுனி கூறுகையில் கடந்த ஓராண்டில் 5000 கிலோ மீட்டர் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டம் ரயில்வே வரலாற்றின் முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது செயல்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார்.
மேலும் ரயில்களை மட்டுமே கனவு காணக்கூடிய பல பகுதிகளுக்கும் இப்போது ரயில்வே பாதை உள்ளது எனவும் ரயில்களின் சராசரி வேகம் இப்போது மணிக்கு 80 கிலோமீட்டர் வரை உள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மாபெரும் மகத்தான பணிகள் நடந்துள்ளன எனவும் கடந்த 10 ஆண்டுகளும் இந்திய ரயில்வே துறையின் பொற்காலம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்