உலக செய்திகள் செய்திகள் இந்திய ரிசர்வ் வங்கி…புதிய கொள்கை வெளியீடு….!!!! Sathya Deva8 August 2024043 views இந்திய ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கை குழு ஆர்பிஐயின் பணவியல் கொள்கை குறித்து இன்று விவாதித்தது. இந்த கூட்டத்தில் எடுத்த முடிவை ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். அவர் யூபிஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் இது யுபிஐ மூலம் வரி செலுத்துவதை எளிதாக்கும் என்றும் தெரிவித்துள்ளார் . மேலும் வங்கி காசோலைகளை சில மணி நேரங்களிலே செக் க்ளியரிங் செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டது என கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். தற்போது செக் ட்ரங்கேஷன் சிஸ்டம் மூலம் செக் க்ளியரிங் செய்ய இரண்டு வேலை நாட்கள் ஆகும் நிலையில் இந்த புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.