செய்திகள் இந்திய வானிலை மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு… ரெட் அலர்ட்,ஆரஞ்சு அலர்ட்…..!!! Sathya Deva20 July 2024059 views இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய்க்கிழமை அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாக தகவல் கூறியுள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒடிசா கடற்கரை பூரிக்கு அருகே கரை கடக்கும் என்றும் அதன் பிறகு மேற்கு வடமேற்கு நோக்கி ஒடிசா சத்தீஸ்கர் முழுவதும் நகர்ந்து வலுவிலக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தெலுங்கானா, மத்திய மகராஷ்டிரா, கடலோர கோவா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. மேலும் ஒடிசா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் கடலோர ஆந்திரா. மற்றும் சௌராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய மாநில ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.