பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் வழங்கும் முடிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணியில் இளம் வீரர்களை இணைக்கும் இலக்கை நோக்கி இளைஞர்களுக்கு ஸ்ரீஜேஷ் ஹாக்கி பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில், இந்திய ஹாக்கியில் அவர் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில் 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.