உலக செய்திகள் செய்திகள் இந்திய ஹாக்கி அணி…நடு வானில் பாராட்டிய பயணிகள்…!!! Sathya Deva12 August 2024087 views ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி ஸ்பென் அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. இதனால் ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஹாக்கி அணி வென்ற பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்று இந்திய ஹாக்கி அணியினர் பாரீசிலிருந்து ஏர் இந்தியா விமான மூலம் நேற்று காலை நாடு திரும்பினர். விமானம் வானில் பறக்கையில் விமானி தங்களது விமானத்தில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியினர் மற்றும் அவரது குடும்பத்தினர் நம்முடன் பயணிப்பதாக மைக்கில் அறிவித்தார். அப்போது அங்கு இருந்த சக பயணிகள் அவர்களுக்கு உற்சாகமாக கைதட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர்கள் டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய போது மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.