செய்திகள் மாநில செய்திகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாரயண மூர்த்தி…இந்தியாவின் மக்கள் தொகைபற்றி பேச்சு…!!! Sathya Deva19 August 2024081 views சர்வதேச தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாரயண மூர்த்தி. இவர் மோதிலால் நேரு இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசி அவர் இந்தியாவின் மக்கள்தொகை கட்டுப்பாட்டை பற்றி நாம் கவலைப்படுவதில்லை என்றும் இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவின் வாழும் மக்களுக்கு வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். அமெரிக்கா, பிரேசில், சீனா போன்ற நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அவர்களிடம் தனிநபர் நில இருப்பு அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் இதை கருத்தில் கொண்டு அனைவரும் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அது நம் கடமையும் பொறுப்பும் என்று கூறியிருந்தார். அவர் ஒரு தலைமுறை இவ்வாறு தியாகம் செய்தால்தான் அடுத்து வரும் தலைமுறையின் வாழ்வாதாரம் அதிகரிக்கும் எனவும் பெற்றோர்கள், சொந்தங்கள், ஆசிரியர்கள் செய்த தியாகத்தினால் தான் நான் இன்று உங்கள் முன் சிறப்பு விருந்தினராக நிற்கிறேன் என்றார்.