Home » இன்று நாள் எப்படி இருக்கு 12 ராசிகளுக்கான பலன் இதோ

இன்று நாள் எப்படி இருக்கு 12 ராசிகளுக்கான பலன் இதோ

by Inza Dev
0 comment
Raasi

மேஷம் ராசி அன்பர்களே,

இன்று எதிர்பாராத வரவுகள் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தந்தை வழி உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். சோர்வுடன் காணப்படுவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உயர் அதிகாரிகளை புரிந்து கொண்டு அவர்களுக்கேற்றார் போல் நடந்து கொள்வீர்கள். இன்றைய தினம் போட்டிகள் நிறைந்த நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று நீண்ட நாட்களாக மனதில் இருந்த குழப்பங்கள் விலகி செல்லும். ஆன்மீக வழியில் ஆர்வம் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விலகிச் சென்றவர்கள் வந்து இணைவார்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். இன்றைய தினம் பெருமை நிறைந்த நாளாக இருக்கும்.

மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று தாழ்வு மனப்பான்மையை தவிர்த்திடுங்கள். மனதில் இருந்த அமைதியற்ற சூழல் மாறும். வரவுகளை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். புதுப்புது இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

கடகம் ராசி அன்பர்களே,

இன்று தொழில் தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளுங்கள். ஆன்மீக வழியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்ந்த பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். உயர்கல்வி நினைத்தபடி அமையும். இன்றைய தினம் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும்.

சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். புதிய விஷயங்களில் ஈடுபடும் போது ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கடன் பிரச்சனை குறையும். தொழில் நிமித்தமாக அலைச்சல்கள் ஏற்படலாம். உடன் இருப்பவர்களை பற்றி சரியாகப் புரிந்து கொள்வீர்கள். இன்றைய தினம் செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்.

கன்னி ராசி அன்பர்களே,

இன்று புதிதாக வாகனம் வாங்கலாமா என்ற எண்ணம் மேலோங்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தொலைந்து போன சில பொருட்கள் கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறும். இன்றைய தினம் மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும்.

துலாம் ராசி அன்பர்களே,

இன்று ஆரோக்கியம் சீராகும். நீண்ட நாளைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் மாறும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வர். தொலைதூரப் பயணத்தின் மூலம் நல்லது நடக்கும். இன்றைய தினம் அன்பு மிகுந்த நாளாக இருக்கும்.

விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று திட்டமிட்ட காரியங்களை சரியாக செய்து முடிப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. நீண்ட நாளைய பிரார்த்தனை இன்று நிறைவேறும். இன்றைய தினம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் நாளாக அமையும்.

தனுசு ராசி அன்பர்களே,

இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவினர்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். இடம் மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இன்றைய தினம் அனுகூலமான நாளாக இருக்கும்.

மகரம் ராசி அன்பர்களே,

இன்று பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சனைக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணத்தின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறும். இன்றைய தினம் சோர்வு நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள்.

கும்பம் ராசி அன்பர்களே,

இன்று திடீர் பயணத்தால் புதிய அனுபவம் கிடைக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் மேலோங்கும். வரவு அதிகரித்து சேமிப்பு உயரும். சோர்வுடன் இருந்தவர்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். வீடு மாற்றத்திற்கான முயற்சி சாதகமாக அமையும். இன்றைய தினம் பக்தியில் மூழ்கி காணப்படுவீர்கள்.

மீனம் ராசி அன்பர்களே,

இன்று செலவுகள் குறையும். மன சஞ்சலங்கள் மாறும். தொலைதூர பயணத்தால் நல்லது நடக்கும். தொழில் வியாபாரத்தில் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஞாபகம் மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மாறும். இன்றைய தினம் எந்த ஒரு செயலிலும் பொறுமையாக ஈடுபடுவது நல்லது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.