Home » இன்று (29-06-2024) நாள் எப்படி இருக்கு….? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ….!!

இன்று (29-06-2024) நாள் எப்படி இருக்கு….? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ….!!

by Inza Dev
0 comment
Raasi

மேஷம் ராசி அன்பர்களே,

இன்று எந்த ஒரு செயலிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களால் நெருக்கடியான சூழல் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். இன்றைய தினம் நன்மைகள் நிறைந்து காணப்படும்.

ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று பெற்றோர்களின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். கடனை அடைப்பதற்கான உதவிகள் கிடைக்கப்பெறும். நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். சக பணியாளர்களால் நல்லது நடக்கும். இன்றைய தினம் ஊக்கத்துடன் காணப்படுவீர்கள்.

மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். நெருக்கமானவர்களுக்காக மற்றவர்களின் உதவியை கேட்டு அலையும் சூழல் உருவாகலாம். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்றைய தினம் ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும்.

கடகம் ராசி அன்பர்களே,

இன்று உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். உத்தியோகம் நிமித்தமான அலைச்சல்கள் குறையும். தேவையற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். அரசு விவகாரங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. இன்று தன்னம்பிக்கை அவசியம் தேவைப்படும் நாள்.

சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். பூர்விக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். புதிய செயல்களில் ஈடுபடும்போது ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படவும். இன்றைய தினம் பிறரிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள்.

கன்னி ராசி அன்பர்களே,

இன்று வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். சவாலான செயல்களையும் திறமையால் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனை நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். சுப காரிய பேச்சுக்கள் சாதகமாக அமையும். இன்றைய தினம் தடைகள் விலகும் நாளாக இருக்கும்.

துலாம் ராசி அன்பர்களே,

இன்று உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நெருக்கடியை கொடுத்த பிரச்சனைகள் குறைந்துவிடும். அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மாறும். இன்றைய தினம் புதிய அனுபவங்கள் கிடைக்கும் நாளாக இருக்கும்.

விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். இன்றைய தினம் செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்.

தனுசு ராசி அன்பர்களே,

இன்று மனதில் இருந்து வந்த குழப்பங்கள் காணாமல் போகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கப்பெறும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். இன்றைய தினம் பக்தியுடன் காணப்படுவீர்கள்.

மகரம் ராசி அன்பர்களே,

இன்று வீட்டிற்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் மாறும். திறமையான பேச்சு மூலம் வெற்றி காண்பீர்கள். இன்றைய தினம் உயர்வு கிடைக்கும் நாளாக இருக்கும்.

கும்பம் ராசி அன்பர்களே,

இன்று உங்கள் மீது பலரும் அதிக நம்பிக்கை கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் நுட்பங்கள் புரிந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். இல்லத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். இன்றைய தினம் முயற்சியால் வெற்றி கிடைக்கும்.

மீனம் ராசி அன்பர்களே,

இன்று யாரிடமும் கோபப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த செயலிலும் நேர்மையுடன் செயல்படுவது சிறப்பு. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் சிந்தித்து செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். இன்றைய தினம் பாராட்டுக்கள் பொழியும் நாளாக இருக்கும்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.