Home » இன்றைய (01-07-2024) நாள் எப்படி இருக்கு….? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ….!!

இன்றைய (01-07-2024) நாள் எப்படி இருக்கு….? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ….!!

by Inza Dev
0 comment
Raasi

மேஷம் ராசி அன்பர்களே,

இன்று தொழிலில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுவதால் நற்பெயர் கிடைக்கும்.

ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று நினைத்த காரியங்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட்டுக் கொடுக்க வேண்டாம். உங்கள் செயலால் மற்றவர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து விடுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிக்கும் சிந்தனை மேலோங்கும். நினைத்ததை செய்து முடிப்பதில் குறிக்கோளாக இருப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கு ஏற்றவாறு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பயணத்தால் புதிய நம்பிக்கை பிறக்கும்.

கடகம் ராசி அன்பர்களே,

இன்று இல்லத்தில் கலகலப்பான சூழல் நிலவும். உறவினர்களின் வருகை இருக்கும். இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். இன்று எந்த ஒரு செயலிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வேகத்தை விட விவேகம் வெற்றியை பெற்று தரும். யாருடைய மனதும் புண்படும்படி பேச வேண்டாம்.

சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு செயல்படுவது நல்லது. பிடிவாத குணத்தை விட்டு விடுவது சிறப்பு.

கன்னி ராசி அன்பர்களே,

இன்று அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். யாருடைய பேச்சுக்கும் செவி சாய்க்காமல் செயல்படுவது நல்லது. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். ஞாபக மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும்.

துலாம் ராசி அன்பர்களே,

இன்று எந்த செயலிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். ஆன்மீக வழியில் ஆர்வம் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இழுபறிகள் மாறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி புரியும் இடத்தில் சாதகமான சூழல் உருவாகும். இன்று எதிலும் வெற்றி காண்பீர்கள்.

விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் எதிர்காலத்திற்காக சில முதலீடுகளை செய்வீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது நண்பர்களிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது. புதிய ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை பெருக்கிக் கொள்வீர்கள். நினைத்த செயல்களை இன்று செய்து முடிப்பீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே,

இன்று நண்பர்களால் நல்லது நடக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும். வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மாறி மன மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உடன் இருப்பவர்களின் உண்மை ரூபங்களை இன்று அறிந்து கொள்வீர்கள்.

மகரம் ராசி அன்பர்களே,

இன்று பயணத்தால் நல்லது நடக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தமான சூழல் மாறும். வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். புதிய வேலை மாறலாமா என்ற எண்ணம் மேலோங்கும்.

கும்பம் ராசி அன்பர்களே,

இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இன்று நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

மீனம் ராசி அன்பர்களே,

இன்று எதிர்பாராத வரவுகள் ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நீண்ட நாளைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. தடைபட்ட காரியங்கள் எந்த இடையூறின்றி நடந்து முடியும்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.