உலக செய்திகள் செய்திகள் இன்ஸ்டா பிரபலம் டிபோரா பெய்க்ஸோடா….மலம் ஃபேஸ் மாஸ்க்…வைரல் வீடியோ…!!! Sathya Deva13 August 2024099 views பிரேசிலை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டிபோரா பெய்க்ஸோடா. இவர் தனது மலத்தை வழக்கமான ஃபேஸ் மாஸ்க் போல முகத்தில் தடவிக் கொள்கிறார். துர்நாற்றத்தை கட்டுப்படுத்த மூக்கில் க்ளிப் மாட்டி உள்ளார். பின்னர் இந்தஃபேஸ் மாஸ்க்கை கழுவுகிறார். இது எனக்கு வேலை செய்தது, என் தோல் உதிர்வதை நிறுத்திவிட்டதாக கூறினார். இந்த அழகு சிகிச்சையை விமர்சித்த மருத்துவ நிபுணர்கள், இவ்வாறு செய்வதால் நன்மைகளை விட, உடல்நல அபாயங்கள் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்தனர். சரும மருத்துவரான டாக்டர். சோஃபி மோமன் கூறுகையில்,மலத்தை ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை பயக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை,” என்று தெரிவித்தார்.மேலும் டிபோரா பெய்க்ஸோடா ஏற்கனவே தனது மாதவிடாய் ரத்தத்தை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தி இருந்தார். தற்போது புதுவித யோசனையுடன் வந்துள்ள இவர் இதனால் தனது சருமத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.