இந்தியாவின் பல்வேறு பகுதியில் பருவமழை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதில் கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் மழை காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்பட்டன. இந்த வரிசையில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவை அடுத்த ராம்பூரில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்திற்கு பேரிடர் மேலாண்மை ஆணைய ஆணையர் அனுபம் காஷ்யப் மற்றும் மாவட்ட மூத்த காவல்துறை தலைவர் சஞ்சீவ் காந்தி ஆகியவர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இவர் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி மேக வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் 20 பேர் மாயமாகியுள்ளனர் என காஷியப் தெரிவித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள கட்டிடம் சீட்டு கட்டு போன்று சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ஃபியூரி புயல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெய்து வரும் கனமழையில் இதுவரை இருவர் உயிரிழந்தனர் மற்றும் பலர் மாயமாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.