சினிமா செய்திகள் தமிழ் சினிமா “இரண்டு நாட்கள் பொறுங்கள்”… “கோட்” ட்ரைலர் குறித்து அர்ச்சனா கல்பாத்தி சூப்பர் அப்டேட்…!!! Sowmiya Balu12 August 20240113 views தமிழ் திரையுலகில் தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் “கோட்”. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுவரை இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் முன்பதிவு UK வில் தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் டிரைலர் அப்டேட் குறித்து ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ”அற்புதமான ட்ரெய்லரை தயார் செய்து வருகிறோம். அதனால் அமைதியாக இருந்து எங்களுக்கு இரண்டு நாட்கள் கொடுங்கள்” இது பற்றிய முறையான அப்டேட் நாளைக்கு வெளியாகும் என கூறியுள்ளார்.