செய்திகள் மாநில செய்திகள் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர்கள்…அதிரடியாக கைது…!!! Sathya Deva18 August 2024087 views கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த 44 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள பரபரப்பான சாலையில் இளைஞர்கள் வீலிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து பெங்களூரு போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சாலையில் பைக்கில் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்த 44 பேரை கைது செய்தனர். இவர்களின் மீது 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.