இருமல், சளித்தொல்லை இருக்கா…? இதோ அதை சமாளிக்க சுவையா ஒரு சட்னி..!!!

பனிக்காலம் முழுமையாக முடியாத நிலையில் பலருக்கும் அவ்வபோது சளி மற்றும் இருமல் தொல்லை வாட்டி வதைத்து வருகின்றது. பருவ கால நோய் தொற்றை எதிர்த்து போராட வலுவான நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம். சுலபமாக கிடைக்கக்கூடிய வெற்றிலையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் இருப்பதோடு ஆன்ட்டி செப்டிக் தன்மையும் உள்ளது. அல்சர், அஜீரணம், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என பல மருத்துவ பயன்களை கொண்டுள்ள வெற்றிலை சளி தொல்லையை சமாளிக்கவும் உதவுகிறது.

பொதுவாக பெரியவர்கள் இயல்பாக சாப்பிடக்கூடிய வெற்றிலையை குழந்தைகளை சாப்பிட வைப்பது கடினம். பச்சை வெற்றிலை சுவை பிடிக்காதவர்கள் இதுபோல சட்னி தயார் செய்து அதன் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். மிளகு மற்றும் சீரகத்தை வறுத்து அதனுடன் தேங்காய், பொட்டுக்கடலை, வெற்றிலை, மிளகாய், உப்பு, பூண்டு போட்டு அரைத்து எண்ணெயில் கடுகு, உளுந்து தாளித்தால் சுவையான வெற்றிலை சட்னி ரெடி. சுலபமாக செய்யக்கூடிய ருசி மிகுந்த இந்த சட்னியில் சத்துக்களும் இருப்பதால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

Related posts

குழந்தைகள் விரும்பும் தேங்காய் பிஸ்கட்…. வீட்டிலேயே செய்யலாமே….!!

நாவல் பழ சீசன் வந்திருச்சு!!! நாவல் பழத்தின் நன்மைகள்!!!

தித்திக்கும் சுவையில் அசோக அல்வா…. செய்து அசத்துங்க….!!