உலக செய்திகள் செய்திகள் இலங்கை அதிபர் தேர்தல்….அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!! Sathya Deva26 July 20240112 views இலங்கையின் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி ராஜினாமா செய்ததால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரம் சிங் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வருகின்ற நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. இதன் காரணமாக அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்காக தேர்தல் அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி செப்டம்பர் 14ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 16ஆம் தேதிக்குள் இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இலங்கை அதிபர் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த வகையில் இலங்கை அதிபத் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தூங்குகிறது என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் தற்போது அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். அதேபோல் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.