உலக செய்திகள் செய்திகள் இலங்கை அதிபர் தேர்தல்…பொதுஜன பெரமுனா கட்சி சார்பாக நமல் ராஜபக்சே தேர்வு…!!! Sathya Deva7 August 20240109 views இலங்கையில் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் வருகின்ற 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா களத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து சில நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இதில் நமல் ராஜபக்சே தேர்வு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நமல் ராஜபக்சே முன்னாள் அதிபரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சேயின் மூத்த மகன் ஆவார் என குறிப்பிடப்படுகிறது