Home சினிமா செய்திகள் இவர்தான் “கோல்டன் ஸ்பேரோ” பாடலை எழுதியவர்…தனுஷ் வெளியிட்ட போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!!

இவர்தான் “கோல்டன் ஸ்பேரோ” பாடலை எழுதியவர்…தனுஷ் வெளியிட்ட போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் தனுஷ் இயக்கி வெளியான ”ராயன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கும் அடுத்த படமான ”நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” படத்தின் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான ”கோல்டன் ஸ்பேரோ” வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த பாடல் வரிகளை தனுஷின் மகன் யாத்ரா எழுதியுள்ளார் என சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனுஷ் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.