Home சினிமா செய்திகள் இவர் தான் மாப்பிள்ளையா…. விரைவில் திருமணம்….வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்கள்….!!

இவர் தான் மாப்பிள்ளையா…. விரைவில் திருமணம்….வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்கள்….!!

by Gayathri Poomani
0 comment

திரை உலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா 2010-இல் சல்மான் கானின் “தபாங்” திரைபடம் மூலமாக கதாநாயக திரையுலகில் அறிமுகமானார். பின் ஜோக்கர், போர்ஸ் 2, அகிரா மற்றும் தபாங் 2 என பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் தமிழில் ரஜினிகாந்த் உடன் லிங்கா திரைப்படத்தில் சோனாக்சி நடித்து தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகம் ஆகியுள்ளார். பின் இவர் இறுதியாக நடித்த வெளியாகிய “ஹீரா மண்டி தி டைமண்ட் பஜார்” வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நடித்தவர்களுக்கு அடுத்தடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து ரிச்சா சதாவிற்கு இத்தொடரின் ஒரு பாடலுக்கு படப்பிடிப்பு நடத்தும் பத்து நாள் முன் திருமணம் முடிந்துள்ளது. இதில் நடித்த அதிதி ராவ் ஹைதருக்கு படபிடிப்பு முடிந்த உடன் நடிகர் சித்தார்த்துடன் நிச்சயம் முடிந்துள்ளது.

பிறகு தற்போது சோனாக்சி சின்ஹாவிற்கு திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. சோனாக்சி சின்ஹாவும் இந்தி நடிகர் சாஹிர் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்து தற்போது வருகின்ற 23-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த திருமணம் சோபா ஹாட் ஸ்பாட்டில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு வெளியான டபுள் X1 என்ற படத்தில் சாகிர் மற்றும் சோனாக்சி இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இவர்கள் தங்களின் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் கலந்து கொள்ள இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து தகவல் அறிந்த ரசிகர்கள் வலைத்தளத்தில் சோனாக்சி சின்ஹாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.