பாலஸ்தீன நகரமான காசாவின் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 20) இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் 39 பேர் கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது. அங்குள்ள இஸ்ரவேல் பீரங்கி படைகள் ரஃபா நகரில் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி தாக்குதல்களை ஏற்படுத்தி உள்ளன. இந்த இந்த தாக்குதலினால் பத்திரிக்கையாளர்கள் 161 பேர் உயிரிழந்து உள்ளன என கூறப்படுகிறது. மேலும் வான்வழி தாக்குதலால் 10 பேர் பலி எனவும் கூறப்படுகிறது.
இதில் இரண்டு பத்திரிக்கையாளர் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலின் இதுவரை 38, 798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இஸ்ரவேல் பிரதமர் நேதன்யாகு இந்த வாரம் சந்திக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.