உலக செய்திகள் செய்திகள் இஸ்ரேல்…ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல்…!!! Sathya Deva14 August 2024076 views மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கடந்த அக்டோபர் 7-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 40,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி எம் 90 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளோம் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், சிறிது நேரத்திற்கு முன் ஒரு ஏவுகணை காசா பகுதியின் எல்லையைக் கடந்து நாட்டின் மையத்தில் உள்ள கடல் பகுதியில் விழுந்தது கண்டறியப்பட்டது. இஸ்ரேலுக்குள் செல்லாத மற்றொரு ஏவுகணையும் கண்டறியப்பட்டது என தெரிவித்துள்ளது.