உலக செய்திகள் செய்திகள் உக்ரைன் தாக்குதல் ….தீப்பற்றிய எண்ணெய் கிடங்கு…! Sathya Deva13 July 20240107 views உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரஷ்யா உக்ரைன் எரிசக்திகளை தாக்குவதும் உக்ரைன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை தாக்குவதுமாக நடந்து வருகிறது .இந்த நிலையில் இன்று ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் டிரோன் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அங்குள்ள எண்ணெய் கிடங்கில் தீப்பற்றி சுமார் 2100 சதுர அடிக்கு தீ பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது . இதை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது . மேலும் இரண்டு டிரோன்கள் பறந்து வந்த நிலையில் ரஷ்யா அதனை அழித்துள்ளது. அதே வேளையில் ரஷ்யாவின் நான்கு டிரோன்களை உக்ரைன் அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.