உங்களாலும் முடியும்…. சினிமா பாணியில் ஒரு நாள் ஆட்சி…. மாணவிக்கு வாழ்த்துக்கள்….!!

புதுக்கோட்டை பகுதியில் ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளிஅமைந்து இருக்கிறது. இங்கு மாணவிகளின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் இடையே தலைமை பண்பை உருவாக்கும் வண்ணம் பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவியை தேர்வு செய்து அந்த மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியராக ஒரு நாள் பணியில் அமர்த்த ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்பள்ளியில் பிளஸ்-1 உயிரியல் பாடப் பிரிவில் ஆங்கில வழியில் பயில்கின்ற மாணவி மெய்வர்ஷிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பள்ளியில் அவர் ஆறாம் வகுப்பு முதல் படித்து வருகிறார். இவர் படிப்பு மற்றும் தனித்திறமையிலும் சிறந்து விளங்கியதாக அவரை ஆசிரியர்கள் தேர்வு செய்து தற்போது ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணி அமர்த்தியுள்ளனர். இதனை அடுத்து இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி அந்த மாணவி அழைத்து தனது இருக்கையில் அமர வைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பின்னர் சக ஆசிரியர்களும் மற்றும் சக மாணவிகளும் அவரை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்பின் தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்த மாணவி மெய்வர்ஷிதா தனக்கு கொடுக்கப்பட்ட பதவியின் அன்றாட பணிகளை பார்வையிட்டுள்ளார். அதற்குப் பிறகு வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவிகள் மத்தியில் அவர் உரையாற்றியுள்ளார். அப்போது மாணவி மெய்வர்ஷிதா பேசியதாவது, ஒரு நாள் தலைமை ஆசிரியராக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப்போல் நீங்களும் தங்களது தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், பள்ளி படிப்பை நிறுத்தி விடாமல் உயர்கல்வி படித்து நீதிபதி மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு வர வேண்டும் எனக் கூறியுள்ளார். எனவே நீங்களும் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியாற்ற கூடிய வண்ணம் திறமையை வளர்க்க வேண்டும் என சக மாணவிகளிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட நடிகர் அர்ஜுன் நடித்திருந்த முதல்வன் படத்தின் ஒரு நாள் முதல்வர் பதவி அமர்ந்து செயல்படுவது போல இவை அமைந்திருப்பதாக பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனைப் போல நடிகை ஜோதிகா நடித்திருந்த ராட்சசி படத்தின் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக அவர் பணிபுரிவது போல அந்த பள்ளியை சிறந்த பள்ளியாக மாற்ற முயற்சி செய்து பல நடவடிக்கைகள் மேற்கொண்டு மாணவ-மாணவிகளை சுழற்சி முறையில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியில் இருப்பது போன்று அந்த மாணவ மாணவிகள் பள்ளியை வழி நடத்துவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது நிஜத்திலும் சில இடங்களில் ஒரு நாள் கலெக்டர் மற்றும் ஒரு நாள் காவல்துறை அதிகாரி என உயர் பதவிகளில் சிலர் அமர வைக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதே வண்ணம் புதுக்கோட்டை பகுதி அரசு பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக மாணவி ஒருவர் பணியாற்றுவது மற்ற மாணவிகளிடம் ஊக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

மாணவிக்கு பாலியல் தொல்லை… வெளியான திடுக்கிடும் உண்மை… நாகர்கோவிலில் பரபரப்பு…!!

அதிமுக கிளை செயலாளர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை… சேலம் அருகே பரபரப்பு…!!

செப்.5… வ.உ.சி.யின் 153-வது பிறந்தநாள்… அதிமுக சார்பில் மரியாதை…!!