செய்திகள் மாநில செய்திகள் உச்ச நீதிமன்றத்தில்…லாப்டா லேடீஸ் திரைப்படமா…!!! Sathya Deva9 August 20240122 views உச்ச நீதிமன்றத்தில் இன்று லாப்டா லேடீஸ் என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நிர்வாக கட்டிட வளாகத்தில் சி பிளாக்கில் உள்ள அரங்கில் லாப்டா லேடீஸ் திரைப்படம் திரையிட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தலைமை நீதிபதி சந்திரா சூட் மற்றும் உச்ச நீதிமன்ற தளபதிகள் தங்களின் குடும்பத்தாருடன் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த படத்தில் நடித்த அமீர்கான் மற்றும் இயக்குனர் கிரண் ராவ் ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்த படத்தின் திரையிடலுக்கு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் இன்று மாலை 4:15 முதல் 620 வரை திரையிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.