செய்திகள் மாநில செய்திகள் உடும்பை வேட்டையாடிய தந்தை …வைரல்வீடியோவால்….கைது Sathya Deva17 July 20240113 views ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டத்தில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வனவிலங்குகளை வேட்டையாடி மாமிசத்தை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மூன்று உடும்புகளை தனது வீட்டிற்கு கொண்டு வந்து தன் குழந்தைகளிடம் விளையாட கொடுத்துள்ளார். அந்த குழந்தைகள் உடும்புகளுடன் விளையாடிய காட்சிகளை செல்போனின் வீடியோவாக பதிவு செய்து அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் ஆர்வலர் கரீம் என்பவர் வனத்துறையிடம் புகார் செய்துள்ளார். இதனால் வேம்பள்ளி வனத்துறை அதிகாரி பாலசுப்பிரமணியம் உடும்பை வேட்டையாடியதற்காக சிரஞ்சீவி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.