உலக செய்திகள் செய்திகள் உணவகத்தில் ஆர்டர் செய்த உணவில் மூக்கு வளையம்….அதிர்ச்சி அடைந்த பெண்…!!! Sathya Deva6 August 2024099 views அமெரிக்காவில் விர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் ஜெர்மி. அவர் பிரபல உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது தனக்கு பிடித்த சலுபா உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டார். அவர் திடீரென கூர்மையான ஒன்றை கடித்ததால் அதிர்ச்சி அடைந்தார். உடனே சாப்பிட்ட உணவை வெளியே எடுத்து பார்த்தபோது அதில் மூக்கு வளையம் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நடந்த சம்பவத்தை சமூக வலைத்தளங்களின் பதிவிட்டார். அவரின் இந்த பதிவு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது. இதை பார்த்த பல நெட்டிசன்கள் அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன என கூறப்படுகிறது.