ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் உதவி கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது. அப்போது நேற்று முன்தினம் அலுவலகம் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அந்த அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், முக்கிய நில ஆவணங்கள் எரிந்தது என கூறப்படுகிறது . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் முக்கிய கோப்புகளை எடுத்து கொண்டு தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றாலும் ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்ததால் போலீசருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அங்கு பாட்டில்கள் மற்றும் தீக்குச்சிகள் இருந்தன என கூறப்படுகிறது . இதன் மூலம் திட்டமிட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது என உறுதியானது. போலீசார் ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மதனப்பள்ளி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு உட்பட பகுதிகளில் 900 ஏக்கர் நிலம் மோசடி நடந்தாகவும் அதனுடைய முக்கிய கோப்புகள் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தீ வைப்பு சம்பந்தமாக மதனப்பள்ளியில் வேலை செய்த முன்னாள் உதவி கலெக்டர்கள் முரளி மற்றும் ஹரி பிரசாந்த் ஆகியரிடம் போலீசார் விசாரணை நட த்தி வருகின்றது.